/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 14, 2025 01:07 AM
வேப்பூர் : வேப்பூர் தாலுகா அறிவித்து 12 ஆண்டுகளாகியும், கருவூலம் அமைக்காததால் அரசு ஊழியர்கள், பொது மக்கள் அவதியடைகின்றனர்.
விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் பிர்காவில் 32 கிராமங்களையும், திட்டக்குடியில் இருந்து சிறுபாக்கம் பிர்காவில் 21 கிராமங்களையும் பிரித்து, கடந்த 2013ம் ஆண்டு வேப்பூர் தாலுகா உருவாக்கப்பட்டது.
வேப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கட்டடத்தில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. தாலுகா அறிவித்து 12 ஆண்டுகளாகியும் வேப்பூரில் கருவூலம் அமைக்கவில்லை.
இதனால், அரசு ஊழியர் களின் ஊதியம், ஓய்வூதியர் கள் பென்ஷன், வருவாய் கிரா மங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை, பொது மக்கள் நில அளவைக்கு பணம் செலுத்த, 25 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் கருவூலத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள், பென்ஷனர்கள் குறிப்பிட்ட நாளில் ஊதியம், ஓய்வூதியம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால், கால விரையம், கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், வேப்பூர் தனி தாலுகாவாக உருவாக்கியும் பயனற்ற நிலையில் உள்ளதாக அரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, வேப்பூர் தாலுகாவில் அரசு கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.