பொது விநியோக திட்ட குறைதீர்வு முகாம்
பொது விநியோக திட்ட குறைதீர்வு முகாம்
பொது விநியோக திட்ட குறைதீர்வு முகாம்
ADDED : பிப் 11, 2024 10:44 PM
கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்த பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாமில் பெறப்பட்ட 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
கடலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்ட முகாம் நடந்தது. குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மொத்தம் 27 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
முகாமில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரம்யா, இளநிலை வருவாய் ஆய்வாளர் இளம்பிறை மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடந்தது.