/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரேஷன் கடை ஊழியர் மீண்டும் பணி கோரி தர்ணா ரேஷன் கடை ஊழியர் மீண்டும் பணி கோரி தர்ணா
ரேஷன் கடை ஊழியர் மீண்டும் பணி கோரி தர்ணா
ரேஷன் கடை ஊழியர் மீண்டும் பணி கோரி தர்ணா
ரேஷன் கடை ஊழியர் மீண்டும் பணி கோரி தர்ணா
ADDED : செப் 26, 2025 05:13 AM

வேப்பூர்: வேப்பூர் அருகே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் வேளாண் கூட்டுறவு வங்கி முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வேப்பூர் அடுத்த அசகளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. சேப்பாக்கம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். சில மாதங்களுக்கு முன், வேளாண் கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர், பொன்னுசாமியிடம் கல்விச் சான்றிதழ் கேட்டுள்ளனர்.
2 மாதத்திற்குள் கல்விச் சான்றிதழ் வழங்குவதாக கூறிய நிலையில், எவ்வித அறிவிப்பின்றி பொன்னுசாமி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, கூட்டுறவு வங்கி நிர்வாகத்திடம் கல்விச் சான்றிதழை சமர்பித்து, மீண்டும் பணியில் நியமிக்க மனு அளித்தார். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ஆத்திரமடைந்த பொன்னுசாமி, நேற்று காலை 12:00 மணிக்கு வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் வேளாண் கூட்டுறவு வங்கி எதிரில் அமர்ந்து 'தன்னை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும்' என வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், 12:30 மணிக்கு கலைந்து சென்றார்.