பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : அக் 01, 2025 01:22 AM
விருத்தாசலம்; தொட்டிக்குப்பம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும், விருத்தாசலம் - எம்.பரூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்று பஸ் ஏறிச் செல்வது வழக்கம்.
பஸ் நிறுத்ததில் பயணியர் நிழற்குடை இல்லாததால், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, கிராம மக்கள் நலன் கருதி, பயணியர் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


