/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5.74 லட்சம் பறிமுதல்
ADDED : அக் 07, 2025 07:25 AM

கடலுார்; கடலுார் பீச்ரோட்டில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இது கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி அலுவலகங்களின் தலைமையிடமாக உள்ளது. இங்கு, நேற்று 3 மாவட்ட அதிகாரிகளுக்கான கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தீபாவளி வசூல் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி., சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், அலுவலக முதல் தளத்தில் கணக்கில் வராத 5 லட்சத்து 74 ஆயிரத்து 960 ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டது.


