ADDED : பிப் 01, 2024 06:06 AM

கடலுார்: மாநில அளவிலான ஜூடோ போட்டியில் கடலுார் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மூன்றாம் இடம் பிடித்தார்.
கடலுார் மாவட்ட அளவில் பள்ளிக்கல்வி துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜூடோ போட்டி நடந்தது. இதில், கடலுார் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தீபிகா, 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து, பெரம்பலுாரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு தீபிகா மூன்றாம் இடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவியை, பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார், முதல்வர் உதயகுமார் சாம், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


