/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கண்டித்த ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள் கண்டித்த ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள்
கண்டித்த ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள்
கண்டித்த ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள்
கண்டித்த ஆசிரியர்களை தாக்கிய பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 16, 2025 12:39 AM
வேப்பூர்; வேப்பூர் அரசு பள்ளியில், பயிற்சி ஆசிரியர்கள் இருவரை மாணவர்கள் தாக்கினர்.
கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 24; இவர், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியர். நேற்று காலை பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்தது.
தேர்வு எழுதி முடித்த மாணவர்கள், மதியம் பள்ளி வளாகத்தில் மறுநாள் தேர்விற்கு படித்தனர். அவர்களை, பிளஸ் 2 மாணவர்கள் ஏழு பேர் கும்பல் தொந்தரவு செய்தது. இதை பயிற்சி ஆசிரியர் மணிகண்டன் கண்டித்தார்.
ஆத்திரமடைந்த மாணவர்கள், மாலை, 4:15 மணிக்கு, தேர்வு அறையில் இருந்த மணிகண்டனை தாக்கினர். தடுக்க வந்த மற்றொரு பயிற்சி ஆசிரியர் ஸ்ரீநிதி, 21, என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த ஆசிரியர்கள் இருவரும், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.