ADDED : பிப் 29, 2024 11:59 PM
நடுவீரப்பட்டு,: நடுவீரப்பட்டு அன்னை தெரேசா மழலையர் தொடக்கப்பள்ளியில் அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி நிர்வாகி குணாளன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வண்டிப்பாளையம் கல்கி மழலையர் பள்ளி, காரைக்காடு காமராஜர் மழலையர் பள்ளி, பட்டீஸ்வரம் நேரு மழலையர் பள்ளி, பாலூர் எம்.ஆர்.கே.,மழலையர் பள்ளி, அன்னை தெரேசா ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைத்தனர்.
அறிவியல் படைப்புகளை கல்கி பள்ளி நிர்வாகி கதிர்வேல், காமராஜர் பள்ளி நிர்வாகி விஜயகுமார், எம்.ஆர்.கே.,பள்ளி மாயவன், நேரு பள்ளி முதல்வர் எழில்ராணி ஆகியோர் பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.


