ADDED : ஜூன் 04, 2025 08:38 AM

சிதம்பரம்; சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் சேக்கிழார் குருபூஜை விழா நடந்தது.
அறக்கட்டளை செயலாளர் அருள்மொழிசெல்வன் வரவேற்றார். 'வரம் தரும் விநாயகர்' என்ற தலைப்பில் அருட்பிரகாசம் பேசினார். அதனைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. சிறப்பு விருந்தனர் ராமநாதன், இளையஞானிக்கு தமிழ்ச்செல்வன் விருது, கல்யாணசுந்தர ஓதுவாருக்கு சிவாச்சாரியார் செம்மல் விருது, பாலசுப்பிரமணியன் ஓதுவாருக்கு திருமுறை இசை செம்மல் விருது வழங்கி பேசினார்.
ஆறுமுக நாவலர் பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவை பனசை மூர்த்தி ஒருங்கிணைத்தார். நடனசபாபதி, வக்கீல் சம்மந்தம், பாலசுப்ரமணியன், டாக்டர் முத்துக்குமரன் பங்கேற்றனர்