/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தார் கலவை ஆலையில் புகை வெளியேறுவதால் மக்கள் பாதிப்பு தார் கலவை ஆலையில் புகை வெளியேறுவதால் மக்கள் பாதிப்பு
தார் கலவை ஆலையில் புகை வெளியேறுவதால் மக்கள் பாதிப்பு
தார் கலவை ஆலையில் புகை வெளியேறுவதால் மக்கள் பாதிப்பு
தார் கலவை ஆலையில் புகை வெளியேறுவதால் மக்கள் பாதிப்பு
ADDED : மே 26, 2025 04:38 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே வயல்வெளியில் உள்ள தார் கலவை ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றியுள்ள கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு, மருவாய் உள்ளிட்ட இடங்களில் தார் கலவை ஆலைகள் உள்ளது. இங்கிருந்து பைபாஸ் சாலைகளுக்கு தேவையான கலவை தயார் செய்து லாரிகளில் அனுப்பி வருகின்றனர்.
பேரல்களில் உள்ள தாரை ஆலைகளில் உருக்கும் போது, புகை வெளியாகி சுற்றியுள்ள கிராமங்களில் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பினருக்கும் சுவாசக்கோளாறால் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புகையின் நச்சுத்தன்மை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் இதுவரை வந்து ஆய்வு செய்யவில்லை. இதனால், நாளுக்கு நாள் புகைமூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
எனவே, இனியாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தார் ஆலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.