/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 24, 2025 08:45 AM
புவனகிரி : புவனகிரி, வடக்குத்திட்டை சமுதாயக்கூடத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். நடராஜன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) பாலாமணி, வருவாய் ஆய்வாளர் முருகன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அன்பழகன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அவைத் தலைவர் மாறன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் குமரவேல், மதியழகன், ஒன்றிய நிர்வாகிகள் பாலமுருகன், ரவி, மேகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.