ADDED : டிச 04, 2025 05:22 AM

கடலுார்: கடலுார் ஜி.ஆர்.கே.,குழுமத்தின் புதிய தலைமை செயலாக்க அதிகாரியாக விக்னேஷ் பொறுப்பேற்றார்.
அவர் ஜி.ஆர்.கே.,குழுமத்தில் உள்ள திரையரங்குகள், டாடா, மகேந்திரா வாகன ஷோ ரூம்கள், புதிய கட்டுமான பணியான சட்டக்கல்லுாரி, தங்கும் விடுதிகள், திருமண மண்டபம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளை நிர்வகிக்க உள்ளார்.
அவருக்கு வங்கி அதிகாரிகள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஜி.ஆர்.கே.,குழும ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர் இதற்கு முன்பு மகேந்திரா நிறுவனத்தில் பணியாற் றியவர்.


