ADDED : செப் 26, 2025 05:03 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பஸ் ஸ்டாண்டில் பா.ஜ., வின் ஓட்டு திருட்டை கண்டித்து காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
விஷ்ணுபிரசாத் எம்.பி., கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் திலகர், நகர தலைவர் ரவிக்குமார், செயலாளர் பாரூக், பொருளாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் ராமசந்திரன், நரசிம்மன், நாகமுத்து, நகர துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், அக்பர், கருணா, ஷாஜகான் உட்பட பலர் பங்கேற்றனர்.