/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி
ADDED : மார் 27, 2025 04:25 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலை சமாளிக்க தெர்மாகோல் தொப்பிகளை டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் வழங்கினார்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விருத்தாசலத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, போலீசாருக்கு பழச்சாறு, தர்பூசணி வழங்கினார். பின்னர், போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கினார். டிராபிக் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் குமார், முருகன், காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.