ADDED : டிச 04, 2025 05:18 AM

கடலுார்: கடலுார் நியூ மில்லேனியம் மேல்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.
தலைமை ஆசிரியர் கஸ்துாரி தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக அலுவலர் ஆனந்தஜோதி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
ஆசிரியர்கள் சுந்தரேசன், ரேவந்த், தனலட்சுமி, சுதந்திரவள்ளி ஆகியோர் சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர். ஆசிரியர் அபிராமி நன்றி கூறினா ர்.


