/உள்ளூர் செய்திகள்/கடலூர்/'ட்ரோன்' பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி'ட்ரோன்' பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
'ட்ரோன்' பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
'ட்ரோன்' பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
'ட்ரோன்' பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : பிப் 11, 2024 03:01 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நபார்டு வங்கி புதுச்சேரி சரகம் சார்பில், வேளாண் துறையில் 'ட்ரோன்' பயன்பாடு குறித்து செயல் விளக்க பயிற்சி நடந்தது.
மேலும், இதில், மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவப்பட்ட மாதிரி ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி, முந்திரியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் அடர் நடவு முறை, தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், மோதிலால், காயத்ரி, பேராசிரியர் மற்றும் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தொழில் நுட்பங்கள் குறித்த செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.
இதில், கிராமப்புற மேம்பாட்டு பயிற்சியகம், லக்னோ, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் நாமக்கல், தஞ்சாவூரில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள், இயக்குனர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.