ADDED : பிப் 01, 2024 05:48 AM

கடலுார்: கடலுாரில் நான் ஸ்டாப் சர்வீசஸ் அமைப்பின் பசுமை திட்டப் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி முதல்வர் சகாயராஜ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நான் ஸ்டாப் சர்வீசஸ் அமைப்பு நிறுவனர் திருமுகம், தலைவர் வேலுமணி, செயலாளர் சுந்தர்ராஜன், பட்டிமன்ற பேச்சாளர் குழு இயக்குனர் கணேசன், விளையாட்டு குழு இயக்குனர் வெங்கடேஷ் முன்னிலை வகித்ததனர்.
சிறப்பு அழைப்பாளராக குவனெல்லா மாணவர் இல்லத்தின் அருட்தந்தை ஸ்டாலின் பங்கேற்றார். விழாவை பசுமைத் திட்ட இயக்குனர்கள் சேகர், எழில் ஒருங்கிணைப்பு செய்தனர்.


