/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் 4ம் தேதி சுனாமி ஒத்திகை பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: கலெக்டர் கடலுாரில் 4ம் தேதி சுனாமி ஒத்திகை பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: கலெக்டர்
கடலுாரில் 4ம் தேதி சுனாமி ஒத்திகை பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: கலெக்டர்
கடலுாரில் 4ம் தேதி சுனாமி ஒத்திகை பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: கலெக்டர்
கடலுாரில் 4ம் தேதி சுனாமி ஒத்திகை பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: கலெக்டர்
ADDED : செப் 01, 2025 06:53 AM

கடலுார் : சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு பீதியடைய வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி கலெக்டர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் கடந்த 26ம் தேதி நடந்த காணொளி கூட்டம் மற்றும் அதனை தொடர்ந்து 29ம் தேதி சென்னை பேரிடர் மேலாண்மை ஆணையரால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கடலுார் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் நடந்த கூட்டத்தில் சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
வரும் 4ம் தேதி காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை, சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 புயல் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் சுனாமி வாக் மேற்கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து 10:00 மணி முதல் சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி கடலுார் தாலுகாவிற்குட்பட்ட சொத்திக்குப்பம், பரங்கிப்பேட்டை மீன் இறங்கு தளம் மற்றும் கிள்ளை கிராமத்தில் வடக்கு எம்.ஜி.ஆர்., திட்டு ஆகிய இடங்களில் நடக்கிறது.
சுனாமி எச்சரிக்கைக்கான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, மின்வாரியம்.
ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்புத் துறை, மீன் வளத்துறை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், முதல் நிலை மீட்பாளர்கள், ஆப்தமித்ரா தன்னார்வலர்கள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இதர துறையினரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் இந்த ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம். இது, மாதிரி ஒத்திகை என்பதால் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவி, பயிற்சி கலெக்டர் மாலதி துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.