/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வெள்ளாற்றில் 2 பாலம் அமைக்கும் பணி இரு அமைச்சர்கள் துவக்கி வைப்புவெள்ளாற்றில் 2 பாலம் அமைக்கும் பணி இரு அமைச்சர்கள் துவக்கி வைப்பு
வெள்ளாற்றில் 2 பாலம் அமைக்கும் பணி இரு அமைச்சர்கள் துவக்கி வைப்பு
வெள்ளாற்றில் 2 பாலம் அமைக்கும் பணி இரு அமைச்சர்கள் துவக்கி வைப்பு
வெள்ளாற்றில் 2 பாலம் அமைக்கும் பணி இரு அமைச்சர்கள் துவக்கி வைப்பு
ADDED : பிப் 11, 2024 03:17 AM

திட்டக்குடி: தொழுதுார் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கீழக்கல்பூண்டி மற்றும் கொரக்கவாடி கிராமங்களின் அருகே 2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணியை, அமைச்சர்கள் கணேசன், சிவசங்கர் துவக்கி வைத்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் திருவாலந்துறை, கடலுார் மாவட்டம் கீழக்கல்பூண்டி கிராமங்களுக்கு இடையே வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்டபாலம் மற்றும் கடலுார் மாவட்டம் கொரக்கவாடி, பெரம்பலுார் மாவட்டம் வெள்ளுவாடி கிராமங்களுக்கு இடையே உயர்மட்ட பாலம் அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, திருவாலந்துறை, கீழக்கல்பூண்டி இடையே 8 கோடியே 73லட்ச ரூபாய் மதிப்பிலும், வெள்ளுவாடி, கொரக்கவாடி கிராமங்களுக்கு இடையே 6 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
அதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டினர். பெரம்பலுார் பிரபாகரன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், கடலுார், பெரம்பலுார் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக இருந்த இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பற்றி அறியாத அரசியல் கட்சி தலைவர்கள், நேரில் சென்று பார்த்தால் எவ்வளவு வசதிகள் உள்ளது என தெரியும். திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பஸ்சில் படிக்கட்டு சேதமடைந்ததை, தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் உடைந்த படிக்கட்டுடன் ஓடுவதாக அ.தி.மு.க.,வினர் வதந்தி பரப்புகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கியிருந்தால், இப்போது ஏன் இந்த நிலை ஏற்படப்போகிறது.
தற்போது தமிழக முதல்வர் 4 ஆயிரம் பஸ்கள் வாங்க உத்தரவிட்டு, தற்போது 300 பஸ்கள் முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. படிப்படியாக அனைத்து பஸ்களும் புதியதாக மாற்றப்படும் என தெரிவித்தார்.