ADDED : மார் 18, 2025 06:19 AM

கடலுார் : கடலுார் ஜவான்பவன் அருகில் வி.சி., கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர்கள் ராஜதுரை, செங்கதிர், மாநில நிர்வாகிகள் பழனிவேல், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர். தென்மாவட்டங்களில் நடக்கும் ஜாதிய மோதல்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


