/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் மறியல் குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் மறியல்
குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் மறியல்
குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் மறியல்
குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் மறியல்
ADDED : மே 24, 2025 11:49 PM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நடத்தினர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், காலனி மாரியம்மன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பழுதானது. இதனால் வீட்டிற்கான மின் இணைப்பு மட்டும் தற்காலிகமாக வேறு டிரான்ஸ்பார்மரில் இருந்து வழங்கப்பட்டது.
குடிநீர் வழங்கும் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் குடிநீரின்றி கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9:20 மணிக்கு சி.என்.பாளையம்-சாத்திப்பட்டு சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த துணை வட்டார வளர்ச்சி அன்பரசி, நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழுதான டிரான்ஸ்பார்மரை உடனடியாக சரி செய்யவும், தற்காலிகமாக ஜெனரோட்டர் மூலமாக குடிநீர் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதனையேற்று கிராம மக்கள் 9:30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.