Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஊடகங்களுடன் உறவை ஏற்படுத்தியதால் வளர்ச்சியடைந்தோம்: என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்

ஊடகங்களுடன் உறவை ஏற்படுத்தியதால் வளர்ச்சியடைந்தோம்: என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்

ஊடகங்களுடன் உறவை ஏற்படுத்தியதால் வளர்ச்சியடைந்தோம்: என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்

ஊடகங்களுடன் உறவை ஏற்படுத்தியதால் வளர்ச்சியடைந்தோம்: என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் பெருமிதம்

ADDED : ஜன 27, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நெய்வேலி : ஊடகங்களுடன் தொடர் உறவை ஏற்படுத்தியதால் வளர்ச்சியடைந்தோம் என என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி பேசினார்.

நெய்வேலியில் நடந்த 75வது குடியரசு தின விழாவையொட்டி, தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:

என்.எல்.சி., வரும் 2030ஆம் ஆண்டளவில், 17 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டிய ஆற்றல் நிறுவனமாக மாறும். ஒடிசாவில் உள்ள தலபிரா II & III சுரங்கத்தில், நிலக்கரி உற்பத்தி மற்றும் விற்பனையில், இதுவரை இல்லாத அளவிற்கு, என்.எல்.சி., சாதனை படைத்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 1410 மெகாவாட் சூரிய ஒளி மின் சக்தி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் வெற்றி பெற்றுள்ளோம். வணிக நிலக்கரி தொகுதி மின் ஏலத்தின் மூலம், ஆண்டுக்கு 3 மில்லியன் டன் திறன் கொண்ட, வடக்கு தாது (மேற்கு பகுதி) நிலக்கரி தொகுதியின் ஒதுக்கீட்டை பெற்றுள்ளோம்.

ஒடிசாவில், 3x800 மெகாவாட் சூப்பர் கிரிட்டிகல் தெர்மல் பவர் திட்டத்திற்கான உத்தரவை சமீபத்தில் வழங்கியுள்ளோம். என்.எல்.சி., இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, ஊடகங்களுடன் தொடர் உறவுகளை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்ததன் மூலம், நிறுவன சந்தைப் பங்கின் விலை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சீராக உயர ஒரு காரணியாக அமைந்தது.

இந்தியாவின் 'டிகார்பனை சேஷன்' திட்டத்தைப் பின்பற்றி, 'நிகர பூஜிய நிலை' இலக்கை அடைந்திடும் நோக்கத்தில், நெய்வேலியில் உள்ள 'பைலட் கிரீன் ஹைட்ரஜன் திட்டம்' பழுப்பு நிலக்கரியிலிருந்து டீசல், பழுப்பு நிலக்கரி வாயுவாக்கம்.

மின்சார வாகனம் சார்ஜ் நிலையம், நீர் உந்து சேமிப்பு மின் திட்டங்கள் மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வது போன்ற திட்டங்கள் உட்பட 'பசுமை நிலக்கரி தொழில்நுட்பங்கள்' குறித்த முயற்சிகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us