/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... எப்போது; பண்ருட்டி மக்கள் எதிர்பார்ப்பு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... எப்போது; பண்ருட்டி மக்கள் எதிர்பார்ப்பு
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... எப்போது; பண்ருட்டி மக்கள் எதிர்பார்ப்பு
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... எப்போது; பண்ருட்டி மக்கள் எதிர்பார்ப்பு
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... எப்போது; பண்ருட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 26, 2025 12:52 AM

பண்ருட்டி, : பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பண்ருட்டி நகரம், கடலுார் - சித்துார் சாலை, விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையின் மையமாக உள்ளது. நகரத்தில் 33 வார்டுகளில் 60,000 மக்கள் வசிக்கின்றனர்.
100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் தினசரி அத்தியாவசிய தேவைக்காக பண்ருட்டி வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, மாவட்டத்தின் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களின் வணிக நகரமாகவும் உள்ளது. உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலுார், திருவெண்ணைநல்லுார் மார்க்கத்தில் இருந்து பண்ருட்டி நகருக்கு காந்திரோடு வழியாக வாகனங்கள் வருகின்றன.
பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் லிங்க் ரோடு பைபாஸ் வழியாக நகராட்சி அலுவலகத்தையொட்டி டைவர்ஷன் ரோட்டில் செல்கிறது.
நான்குமுனை சந்திப்பில் கடலுார் - சித்துார் சாலை, வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக காந்திரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் ரயில்வே மேம்பால சர்வீஸ் சாலைகள் (மார்க்கெட்) வழியாக யூடர்ன் முறையில் மேம்பாலம் சுற்றி கடலுார் சாலையில் மீண்டும் இணைந்து செல்லும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
மறு மார்க்கத்தில் கடலுாரில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் லிங்க்ரோடு நான்குமுனை சந்திப்பில் இருந்து பைபாஸ் வழியாக கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் நான்குமுனை சந்திப்பில் வி.கே.டி.,தேசிய நெடுஞ்சாலையில் சென்னை- கும்பகோணம் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் எவ்வித நெரிசல் இன்றி பஸ் ஸ்டாண்டு வந்து செல்ல முடியும்.
இதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை இணைந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.