/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
ADDED : மே 24, 2025 11:47 PM

கடலுார்: கடலுார் கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க கல்வித்துறை அதிகாரிகள் விரிவான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, பள்ளிகள் திறக்கப்படும் நாளில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநுால் கழகத்தால் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளிகளுக்கு பாட புத்தங்கள் அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
கடலுார் வருவாய் மாவட்டத்தில் கடலுார் மற்றும் விருத்தாசலம் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. கடலுார் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 537 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 153 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.