Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தவறி விழுந்த தொழிலாளி சாவு

தவறி விழுந்த தொழிலாளி சாவு

தவறி விழுந்த தொழிலாளி சாவு


ADDED : மார் 25, 2025 06:50 AM

Follow on Google

ADDED : மார் 25, 2025 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி : கீரப்பாளையத்தில் தளவாட பொருட்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

கீரப்பாளையம் வடஹரிராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்,50; கூரை வீடு கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கீரப்பாளையம் ஆர்.கே.நகர் திரவுபதியம்மன் கோவில் தெருவில் வீடு கட்டும் வேலை செய்தார்.

அப்போது, வீட்டில் இருந்து பிரித்தெடுத்த பழைய தளவாட பொருட்களை, ஊருக்கு ஒதுக்குப்புற இடத்தில் கொட்டுவதற்காக, குப்பை அள்ளும் வாகனத்தில் ஏற்றி சென்றார்.

கீரப்பாளையம் அருகே சுடுகாட்டு பகுதிக்கு சென்றபோது, வாகனத்தில் இருந்து பரமசிவம் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap