Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில் பாதை சீரமைப்பு இயந்திரங்களுக்கு விருதை ரயில் நிலையத்தில் பணிமனை

ரயில் பாதை சீரமைப்பு இயந்திரங்களுக்கு விருதை ரயில் நிலையத்தில் பணிமனை

ரயில் பாதை சீரமைப்பு இயந்திரங்களுக்கு விருதை ரயில் நிலையத்தில் பணிமனை

ரயில் பாதை சீரமைப்பு இயந்திரங்களுக்கு விருதை ரயில் நிலையத்தில் பணிமனை

ADDED : அக் 14, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்; விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தண்டவாளம், மின்பாதை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ராட்சத இயந்திரங்களுக்கு புதிதாக பணிமனை கட்டும் பணி நடக்கிறது.

திருச்சி - சென்னை, கடலுார் - சேலம் ரயில் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபார் மற்றும் சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், சரக்கு என தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. பயணிகள், சரக்கு வர்த்தகம் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது.

அதிக ரயில் போக்குவரத்து காரணமாக தண்டவாளத்தில் தேய்மானம், ஸ்லீப்பர் கட்டைகள், ஜல்லிகள் விலகுவது போன்ற வழக்கமான தொழில்நுட்ப பணிகளுக்கு அவ்வப்போது ராட்சத இயந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணி நடக்கிறது.

இதற்காக வரும் ராட்சத இயந்திரங்கள் வழக்கமாக சரக்கு ரயில்களை நிறுத்தும் தண்டவாளத்தில் நிறுத்தப் படுகின்றன.

தற்போது, காணாதுகண்டானில் இயங்கும் எஸ்.என்.ஜெ., டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் ஆலைக்கு, மும்பையில் இருந்து மொலாசஸ் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் சரக்கு ரயில் தடத்தில் தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுத்துவதற்கு மாற்றாக, புதிதாக பணிமனை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. அதன்படி, சரக்கு இறக்கும் தளத்திற்கு அருகே இரும்பு ெஷட், புதிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இங்கிருந்து திருச்சி, கடலுார் மார்க்க ரயில் பாதையில் பராமரிப்பு பணிகளை எளிதில் மேற்கொள்ள முடியும்.

ஓரிரு மாதங்களில் கட்டுமான பணி நிறைவடைந்ததும், ராட்சத சீரமைப்பு இயந்திரங்கள் தனி பாதையில் வந்து, தேவையான நேரத்தில் புறப்படும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

அதுபோல், சரக்கு ரயில்கள் நிறுத்தும் தளத்தில் நெல், உரம், மொலாசஸ் வர்த்தகம் குறித்த தகவல் பரிமாற்றத்திற்கு ரயில்வே அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கான பிரிவு அலுவலக கட்டுமான பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us