/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி செய்யாத ஒப்பந்ததாரருக்கு அபராதம் தர்மபுரி ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி செய்யாத ஒப்பந்ததாரருக்கு அபராதம்
தர்மபுரி ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி செய்யாத ஒப்பந்ததாரருக்கு அபராதம்
தர்மபுரி ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி செய்யாத ஒப்பந்ததாரருக்கு அபராதம்
தர்மபுரி ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி செய்யாத ஒப்பந்ததாரருக்கு அபராதம்
ADDED : மார் 26, 2025 02:06 AM
தர்மபுரி ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி செய்யாத ஒப்பந்ததாரருக்கு அபராதம்
தர்மபுரி:அரசு மருத்துவமனையில் துாய்மை பணியை சரிவர மேற்கொள்ளாத, தனியார் ஒப்பந்ததாரருக்கு, மாவட்ட கலெக்டர் சதீஸ், 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து கையிருப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவமனையில் துாய்மை பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் இருந்ததால், துாய்மை பணிகள் மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது போன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என, ஒப்பந்ததாரரை எச்சரித்தார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, மயக்கவியல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் (பொ) சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் நாகேந்திரன், பானுரேகா, குழந்தை பிரிவு மருத்துவர்கள் ரமேஷ்பாபு, பாலாஜி மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.