/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 30, 2024 01:59 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி, போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, கல்வி இயக்குனர் ஜான் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம், ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது மாணவ, மாணவியர் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் போதையால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பாதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சென்றனர். இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.