/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு மருத்துவமனைக்கு ரூ.3.21 கோடியில் உபகரணம் அரசு மருத்துவமனைக்கு ரூ.3.21 கோடியில் உபகரணம்
அரசு மருத்துவமனைக்கு ரூ.3.21 கோடியில் உபகரணம்
அரசு மருத்துவமனைக்கு ரூ.3.21 கோடியில் உபகரணம்
அரசு மருத்துவமனைக்கு ரூ.3.21 கோடியில் உபகரணம்
ADDED : ஜூலை 18, 2024 01:50 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இண்டூர், பவர்கிரீட் கார்ப்பரேஷன் சார்பாக, கார்ப்பரேட் சமூக பொறுப்பு கொள்கை, 2024 - 2025 திட்-டத்தில், அரசு தர்மபுரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரூர் அரசு மருத்துவமனை ஆகியவை பயன் பெறும் வகையில், 3.21 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ உபகர-ணங்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்காக மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில், டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் சாந்தி, அரசு தர்மபுரி மருத்துவக் கல்-லூரி டீன் அமுதவல்லி மற்றும் பவர்கிரீட் கார்ப்பரேஷன் முதன்மை பொது மேலாளர் ஜெயபிரகாஷ், முதன்மை துணை பொது மேலாளர் பாலு ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று முன்தினம் கையெழுத்தானது.