துாய கார்மேல் அன்னை ஆலய தேர் பவனி
துாய கார்மேல் அன்னை ஆலய தேர் பவனி
துாய கார்மேல் அன்னை ஆலய தேர் பவனி
ADDED : ஜூலை 18, 2024 01:49 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைக்கோட்டை துாய கார்மேல் அன்னை ஆலய, 75 ம் ஆண்டு பவள விழா தொடக்கம், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லியாண்டர் பயஸ் தலைமையில் நடந்தது. தென்கரைக்கோட்டை பங்குத்தந்தை வினோத் லுாயிஸ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடந்-தது.
இதில் ஏராளமான இறை மக்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை வான வேடிக்கையுடன் கூடிய ஆடம்பர தேர் பவனி தொடங்கப்பட்டு, பாத்திமா நகர், தென்கரைக்கோட்டை மற்றும் நாயக்கர் தெரு வழியாக சென்றது. அப்போது ஏராளமான கிறிஸ்-தவ மக்கள் பங்கேற்றனர்.