ADDED : ஜூன் 28, 2024 01:01 AM
அரூர், அரூர் அடுத்த வேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்தி ராமன் தலைமை வகித்தார். ஊர்வலத்தில், தலைமையாசிரியர் கல்பனா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.