/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட 2,560 மனுக்கள்'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட 2,560 மனுக்கள்
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட 2,560 மனுக்கள்
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட 2,560 மனுக்கள்
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெறப்பட்ட 2,560 மனுக்கள்
ADDED : ஜூலை 16, 2024 01:53 AM
தர்மபுரி: நகர பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடர்ந்து, தமிழகத்தின் ஊரக பகுதிகளிலும் இத்திட்டத்தை தமி-ழக முதல்வர் தர்மபுரியில் கடந்த, 11 அன்று தொடங்கி வைத்தார்.
இதில், தர்மபுரி மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்-டத்தில் ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் ஜூலை, 11 முதல், செப்., 4 வரை, 70 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், நேற்று தர்மபுரி வட்டாரத்திற்கு உட்-பட்ட இலக்கியம்பட்டி பஞ்., க்கு வின்சென்ட் திருமண மண்ட-பத்திலும், ஏரியூர் வட்டாரத்தில் சுஞ்சல்நத்தம், நாகமரை பஞ்.,களுக்கு ஏரியூர் பொன்னப்பகவுண்டர் திருமணமஹால், பாப்-பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் சித்தேரி பஞ்., சித்தேரி சமுதாய கூடத்திலும் முகாம் நடந்தது. பென்னாகரம் வட்டாரத்தில் சின்-னம்பள்ளி, அரகாசனஹள்ளி, கலப்பம்பாடி, மஞ்சநாயக்கன-ஹள்ளி பஞ்., களுக்கு கலப்பம்பாடி வி.பி.ஆர்.சி., கட்டடம், நல்-லம்பள்ளி வட்டாரத்தில் ஏ.ஜெட்டிஹள்ளி, தடங்கம் பஞ்.,களுக்கு ஏ.ஜெட்டிஹள்ளி சமுதாய கூடம், காரிமங்கலம் வட்டாரத்தில் பிக்கனஹள்ளி, வெள்ளிசந்தை, ஜக்கசமுத்திரம், திம்மராயண-ஹள்ளி பஞ்., களுக்கு பிக்கனஅள்ளி வி.பி.ஆர்.சி., கட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடந்தது.கிராமப்புற மக்களுக்கு, 15 அரசு துறைகள் மூலம், 44 வகை-யான சேவைகள் தொடர்பாக, மனுக்கள் பெறப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். இதில், சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, வாரிசு சான்றிதழ் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 2,560 மனுக்-களை பொதுமக்கள் அளித்தனர்.