ADDED : அக் 03, 2025 01:47 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ராமகோண்டஹள்ளியை சேர்ந்த மவுனிகா, 32. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 30 அன்று மவுனிகா மாயமானார். இது குறித்து, அவரது கணவர் முனுசாமி அளித்த புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பென்னாகரம் தாலுகா, மஞ்சாரபட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த, 18 வயது மாணவி, பாப்பாரப்பட்டி அரசு கலை கல்லுாரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 30 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி அடுத்த, தோக்கம்பட்டி இந்திரா நகர் காலனியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாணவி மாயமானார். இது குறித்து, பெற்றோர் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


