/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனைசட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு குறித்து ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை
ADDED : ஜூலை 13, 2024 08:19 AM
தர்மபுரி: சேலம் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ஏ.டி.ஜி.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், கோவை மற்றும் சேலம் சரகங்களில் பணிபுரியும் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., ஆகியோருடனான ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.இதில், சேலம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, ரவுடிகளை ஒழிக்க தேவையான நடவடிக்கை மேற்-கொள்வது, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுப்பது, சாலை விபத்துக்களை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடந்தது.
ஐ.ஜி., பவானீஷ்வரி, சேலம் சரக டி.ஐ.ஜி., உமா, கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்க-துரை, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், சேலம் எஸ்.பி., அருண் கபிலன், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் ஈரோடு எஸ்.பி., ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.