ADDED : ஜூலை 13, 2024 08:19 AM
ஓசூர்: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே திப்பசமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன், 60.
கிருஷ்ண-கிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தின் செக்யூரிட்டி சர்வீசில் மேலாளராக பணியாற்றுகிறார்; நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பணியில் இருந்த போது, டாடா நிறுவனத்தின் கட்டட கட்டுமான பகு-தியில் இருந்த, 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 15 அடி நீள காப்பர் கம்பி ஒயரை, ஒருவர் திருட முயன்றார். இதை கவனித்த முருகேசன், அந்த நபரை கையும், களவுமாக பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசார-ணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் கணேஷ் கால-னியை சேர்ந்த கோவிந்தராஜ், 31, என்பதும், டாடா நிறுவனத்தில் தனியார் ஒப்பந்தத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், காப்பர் கம்பி ஒயர் மற்றும் அவரது பேஷன் புரோ பைக்கை பறிமுதல் செய்தனர்.