/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கைடவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை
டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை
டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை
டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2024 12:54 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், கிராம பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வது, தொடர் கதையாக உள்ளது.இதனால், பல இடங்களில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் மாணவர்களிடையே மோதல்கள் நடக்கிறது. எனவே, அனைத்து அரசு பஸ்களின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.