Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பெருமாள் கோவில்களில் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

ADDED : அக் 12, 2025 02:56 AM


Google News
தர்மபுரி: புரட்டாசி மாதம், 4வது சனிக்கிழமையை ஓட்டி நேற்று, பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரி-சனம் செய்தனர்.

புரட்டாசி மாதம், 4வது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. தர்மபுரி அடுத்துள்ள மணியம்பாடி வெங்கடரமண சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதேபோல், பழைய தர்மபுரி அடுத்த, வரதகுப்பம் வெங்கடரமண சுவாமி மலர் அலங்காரத்திலும், பாகலஹள்ளி சென்றாய பெருமாள், தண்டுகாரம்பட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் என, மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்-காரத்தில் அருள் பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.* கடத்துார் அடுத்த மணியம்

பாடியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கடத்துாரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல் பொம்மிடி அடுத்த கதிரிபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, இருளப்பட்டி போடுவராயன் மலையில் அமைந்துள்ள பெருமா-ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளி-லுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏரா-ளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* அரூர், பழையபேட்டை கரியபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழி-பட்டனர். அதேபோல், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரத-ராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ட ரமண பெருமாள் கோவில் மற்றும் மருதிப்-பட்டி, பெத்துார், கொங்கவேம்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில், நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அரூர் கடைவீதியில், பூக்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால், அதன் விற்பனை ஜோராக நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us