/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா வெள்ளி நாணயங்கள் வழங்கல் தர்மபுரியில் காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா வெள்ளி நாணயங்கள் வழங்கல்
தர்மபுரியில் காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா வெள்ளி நாணயங்கள் வழங்கல்
தர்மபுரியில் காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா வெள்ளி நாணயங்கள் வழங்கல்
தர்மபுரியில் காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா வெள்ளி நாணயங்கள் வழங்கல்
ADDED : அக் 13, 2025 02:21 AM
தர்மபுரி: 'காலைக்கதிர்' முகவர்கள் குடும்ப விழா, நேற்று தர்மபுரி
யில் கொண்டாடப்பட்டது. அதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட முகவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
மக்களின் மனசாட்சியாக உள்ள 'காலைக்கதிர்' நாளிதழை மக்க-ளிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் உழைப்பை சிறப்பிக்கும் வகையில், 'முகவர்கள் குடும்ப விழா - -2025' தர்மபுரியில் நடந்-தது. முதலில் வந்த முகவர்களின் இல்லத்தரசிகள், 5 பேர் குத்து-விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, 'காலைக்கதிர்' வெள்ளி நாணயத்தை, அதன் ஆசி-ரியர் ராமச்சந்திரன், பொது மேலாளர் ஜெரால்டு வெளியிட, விற்-பனை மேலாளர்
செந்தில்குமார் பெற்று கொண்டார். சிறப்பு அமர்வில் 'செல்வம் சேர்க்கலாம் வாங்க,' என்ற தலைப்பில் எழுத்தாளர் செல்வேந்-திரன் பேசியதாவது:
'காலைக்கதிர்' முகவர்கள் தங்கள் குடும்ப விழாவிற்கு வருவ-துபோல் குடும்பத்தினருடன் வந்துள்ளது மகிழ்ச்சி. முகவர்கள், செய்தித்தாள் விற்பனையை தொழிலாக பார்க்க
வில்லை. ஒரு தொண்டாக செய்வதால் உங்களை தியாகிகள் என அழைக்கலாம். இந்திய மக்கள் தொகையில், 2 சதவீத மக்களே நாளிதழ்களை படிப்பதாக தகவல்கள் கூறுகிறது. ஆனால் கடந்த, 6 மாதத்தில், 2.77 சதவீதம் செய்திதாள் விற்பனை அதிகரித்துள்ள-தாகவும் 'ஏபிசி'
நிறுவன கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன், சமூக
வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்தும் செய்திதாள் விற்பனை அதிகரிக்க காரணம், சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்-திகள், அரசியல் சாயம் பூசப்பட்டும், ஒருசார்பாகவும் வருகிறது. அவற்றில் அவசர, அவசரமாக வெளியிடப்படும் தவறான செய்-திகள் உடனடியாக நீக்கப்படுகிறது. இதனால் நம்பகமான செய்தி-களை தேடி அச்சு ஊடகத்திற்கு மக்கள் வருகின்றனர். அதேபோல பெரிய நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்களை நாளிதழுக்கு வழங்கி வருகின்றனர். வரும், 2026 சட்டசபை தேர்தல் நெருங்க-வுள்ள நிலையில் நாளிதழ்கள் விற்பனை மேலும், 8 சதவீதம் அதி-கரிக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
குடும்ப விழாவிற்கு வந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து முகவர்
களுக்கும் 'காலைக்கதிர்' வெள்ளி நாணயம், புத்தாடை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முகவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து உடனடியாக
அச்சிட்டு பெற்று சென்றனர்.


