Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து அளவிடும் கருவி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து அளவிடும் கருவி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து அளவிடும் கருவி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து அளவிடும் கருவி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

ADDED : அக் 17, 2025 01:51 AM


Google News
அரூர், தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள், மானாவாரியாக, தங்களது விவசாய நிலங்களில், மரவள்ளி கிழங்கை சாகுபடி செய்து வருகின்றனர். அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், ஆண்டுதோறும், 30,000 ஏக்கருக்கு மேல் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு, சாகுபடி செய்யப்படும் மரவள்ளி கிழங்கு, இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு, அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மரவள்ளி கிழங்குக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதில்லை. ஆலை உரிமையாளர்களே விலை நிர்ணயம் செய்கின்றனர். மேலும், அவர்கள் ஆலையிலுள்ள கருவியின் மூலமே, மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் மரவள்ளி கிழங்கில், மாவுச்சத்தை அறிந்து கொள்ள வசதியாக, அரூர் பகுதியில் வேளாண் விற்பனை துறை சார்பில், மாவுச்சத்து அளவிடும் கருவி அமைக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே, அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து அளவிடும் கருவி, புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம், அரூர் வருவாய் கோட்டத்தில், மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விற்பனைக்கு முன், தாங்கள் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கை கொண்டு வந்து அதிலுள்ள உள்ள மாவுச்சத்து அளவு குறித்து எவ்வித கட்டணமும் இல்லாமல் அறிந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளரை, 99942 93363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us