ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
ADDED : செப் 12, 2025 01:48 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திலுள்ள பொம்மிடி ஊராட்சி வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு கொங்கனாபுரம், ஓமலுார், ஏற்காடு, கணவாய் புதுார், அரூர், கம்பைநல்லுார், கடத்துார், வத்தல்மலை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகள் வாங்கவும்
ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதில், 10 கிலோ கொண்ட ஆடு, 8,000 முதல், 10,000 ரூபாய் வரையும், ஆடு, ஆட்டு கிடா, 5,000 முதல் அதிகபட்சம், 25,000 ரூபாய் வரையும் விற்பனையானது. கடந்த வாரம், 20 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்ற நிலையில், நேற்று நடந்த சந்தையில், 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் மொத்தம், 70 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.