/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.50,000 லஞ்சம் இன்ஸ்., சிக்கினார் ரூ.50,000 லஞ்சம் இன்ஸ்., சிக்கினார்
ரூ.50,000 லஞ்சம் இன்ஸ்., சிக்கினார்
ரூ.50,000 லஞ்சம் இன்ஸ்., சிக்கினார்
ரூ.50,000 லஞ்சம் இன்ஸ்., சிக்கினார்
ADDED : செப் 24, 2025 03:15 AM
பாலக்கோடு:சிறுமி திருமணத்தை மறைக்க, 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கல ம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மார்ச், 26ல் காதல் திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். மாவட்ட சமூகநலத்துறையினர், பாலக்கோடு மகளிர் போலீசில் புகா ர் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் வீரம்மாள், 50, விசாரித்த போது, சிறுமியின் தாயிடம், குழந்தை திருமண சட்ட கைது நடவடிக்கையை தவிர்க்க, 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். நேற்று போலீஸ் ஸ்டேஷனில் வைத்து லஞ்சம் வாங்கிய வீரம்மாள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.