/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாக்கடை கால்வாய் தரமாக அமைக்க வலியுறுத்தல் சாக்கடை கால்வாய் தரமாக அமைக்க வலியுறுத்தல்
சாக்கடை கால்வாய் தரமாக அமைக்க வலியுறுத்தல்
சாக்கடை கால்வாய் தரமாக அமைக்க வலியுறுத்தல்
சாக்கடை கால்வாய் தரமாக அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 08, 2025 02:59 AM
சாக்கடை கால்வாய் தரமாக அமைக்க வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 5வது வார்டில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் கோரிக்கை படி, பேரூராட்சி நிர்வாகம், 3.10 லட்சம் ரூபாய் மதிப்பில் இராணிமூக்கனுார் ரோட்டில் சாக்கடை கால்வாய் அமைத்து வருகிறது. இது தரமற்று பெயரளவுக்கு போடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தரமான முறையில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க,
அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.