/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், நுட்பங்களும் பயிற்சி வகுப்பு தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், நுட்பங்களும் பயிற்சி வகுப்பு
தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், நுட்பங்களும் பயிற்சி வகுப்பு
தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், நுட்பங்களும் பயிற்சி வகுப்பு
தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடும், நுட்பங்களும் பயிற்சி வகுப்பு
ADDED : செப் 24, 2025 01:52 AM
தர்மபுரி :தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நகை மதிப்பீடு பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை செப்., 25ம் தேதி துவங்க உள்ளதாக, தர்மபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமான, தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்த பகுதிநேர பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை, செப்., 25ம் தேதி துவங்கி, அக்., 15ம் தேதி வரை நடக்கும். இதில் சேர விரும்பும் தகுதியானவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி தமிழ் மொழியில் மட்டுமே நடக்கும். பயிற்சி வகுப்புகள் அக்., 24ம் தேதி துவங்கும்.
விண்ணப்பம் மற்றும் பயிற்சி கட்டணம், 4,668 ரூபாய். இப்பயிற்சியில் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் சேர்ந்து பயில பயிற்சி, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மொத்தம், 17 நாட்கள் (100 மணி நேரம்) நடக்கும். பயிற்சி முடித்தவர்கள் அரசு வங்கி, கூட்டுறவு வங்கி, சங்கங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனம், தனியார் நகைக்கடைகளில் பணியில் சேரலாம். சுய தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விபரங்களை, தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை நேரடியாகவும், 04346 263529 என்ற தொலைபேசி எண், 98843 97075 என்ற அலைபேசி எண் மூலமாகவும் மற்றும் icmdpi@gmail.com என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.