ADDED : ஜூன் 14, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடியைச் சேர்ந்தவர் கணேசன், 48. கூலித்தொழிலாளி. குடிப்பழக்கமுள்ள அவர், அடிக்கடி வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சில நாட்கள் வெளியே சென்று விட்டு, ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் வீடு திரும்புவது வழக்கம். இது போன்று பலமுறை சென்று வீடு திரும்பியுள்ளார்.
கடந்த பிப்., 10ல் வீட்டிலிருந்து வெளியே சென்-றவர் இதுவரை வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் சந்திரமவுலி நேற்று ஏ.பள்-ளிப்பட்டி போலீசில் கொடுத்த புகார் படி போலீசார் விசாரிக்கின்றனர்.
