ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
தர்மபுரி: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கைவிட வலியு-றுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில், தெருமுனை கூட்டம், தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பத்தில் நேற்று நடந்தது.
இதில் ஒன்றி-யசெயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து உட்பட பலர் பேசினர்.* கடத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று மாலை, மா.கம்யூ., வட்ட செயலாளர் தனுஷன் தலைமையில் தெருமுனை கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் தீர்த்தகிரி, சேகர், சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட செயலாளர் குமார் பேசினர்.