மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 12, 2025 01:49 AM
அரூர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சங்கிலிவாடியில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 3ல் கொடியேற்றம், கங்கணம் கட்டுதல் மற்றும் முளைப்பாரி விதைத்தலுடன் துவங்கியது. நேற்று முன்தினம், மங்கள இசை, மஹா கணபதி ஹோமம், நவசக்தி ஹோமம், முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்தல், முதல்கால யாக வேள்வி பூஜை, கும்ப அலங்காரம் மற்றும் யந்திர பிரதிஷ்டை நடந்தது.
விழாவின், முக்கிய நிகழ்வாக நேற்று காலை பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின், 2ம் கால யாக பூஜை, அதன் பின், விமான கோபுரத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேக, அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.