/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பாட்டியாத்தம்மன் கோவில் பால்குட ஊர்வலம்பாட்டியாத்தம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
பாட்டியாத்தம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
பாட்டியாத்தம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
பாட்டியாத்தம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
ADDED : பிப் 25, 2024 03:55 AM
இண்டூர்: சின்னக்காம்பட்டியில், பாட்டியாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பால்குடம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே, சின்னக்காம்பட்டியில் விநாயகர், முருகர், பாட்டியாத்தம்மன் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 23-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர், சுவாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று, பாட்டியாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.