/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போர்வெல் பழுதால் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்புபோர்வெல் பழுதால் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
போர்வெல் பழுதால் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
போர்வெல் பழுதால் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
போர்வெல் பழுதால் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 29, 2024 02:14 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ராஜாகொட்டாயில், போர்வெல் பழுதால் காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியால், குடிநீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
தர்மபுரி, செம்மாண்டகுப்பம் பஞ்.,க்கு உட்பட்ட ராஜா கொட்டாயில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, போர்வெல், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இதில் சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்த நிலையில், தற்போது வருவதில்லை.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்காக அமைக்கப்பட்ட போர்வெல்லில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததையடுத்து தண்ணீர் வருவதில்லை என தெரியவந்தது. எனவே தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. போர்வெல்லை ஆழப்படுத்தி, இப்பகுதி மக்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும்.