/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பாரா ஒலிம்பிக் வீராங்கனை பெயரை மைதானத்திற்கு சூட்ட கோரிக்கை மனு பாரா ஒலிம்பிக் வீராங்கனை பெயரை மைதானத்திற்கு சூட்ட கோரிக்கை மனு
பாரா ஒலிம்பிக் வீராங்கனை பெயரை மைதானத்திற்கு சூட்ட கோரிக்கை மனு
பாரா ஒலிம்பிக் வீராங்கனை பெயரை மைதானத்திற்கு சூட்ட கோரிக்கை மனு
பாரா ஒலிம்பிக் வீராங்கனை பெயரை மைதானத்திற்கு சூட்ட கோரிக்கை மனு
ADDED : செப் 25, 2025 01:47 AM
ஓசூர், ஓசூர் மாநகர மேயர் சத்யாவிடம், 22வது வார்டு, தி.மு.க., கவுன்சிலரும், பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரில் வசிக்கும் சிவன் மகள் நித்யஸ்ரீ, 20. மாற்றுத்திறனாளியான இவர், பேட்மிண்டன் வீராங்கனை. பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறார்.
இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி, மத்திய அரசு மரியாதை செய்துள்ளது. அவர் தற்போது, சீனாவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா ஒலிம்பிக்கில் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவரால், ஓசூர் மாநகருக்கு பெருமை, மற்ற மாணவர்களுக்கும் முன்மாதிரியாக உள்ளார்.
எனவே, அவருக்கு சிறப்பும், பாராட்டும் செய்யும் வகையில், ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களின் எதாவது ஒன்றின் வளாகத்திற்கு அல்லது விளையாட்டு மைதானம் அல்லது அரங்கிற்கு, நித்யஸ்ரீ பெயரை சூட்ட வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்ள்ளார்.மனுவை பெற்றுக்கொண்ட மேயர் சத்யா, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, நித்யஸ்ரீ பெயரை சூட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.