/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'தர்மபுரி வாசிக்கிறது' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு 'தர்மபுரி வாசிக்கிறது' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு
'தர்மபுரி வாசிக்கிறது' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு
'தர்மபுரி வாசிக்கிறது' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு
'தர்மபுரி வாசிக்கிறது' என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வாசிப்பு விழிப்புணர்வு
ADDED : செப் 24, 2025 01:45 AM
தர்மபுரி :தர்மபுரியில் நடக்கவுள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு, 'தர்மபுரி வாசிக்கிறது' என்ற தலைப்பில், தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் பொது நுாலகத்துறை, தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, தர்மபுரியில் செப்., 26 முதல் அக்., 5 வரை பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில், 10 நாட்கள் புத்தக திருவிழாவை நடத்துகிறது.
இது குறித்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடந்த, 'தர்மபுரி வாசிக்கிறது' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா கலந்து கொண்டு, பள்ளி மாணவியர் மற்றும் ஆசிரியர்களுடன் புத்தகத்தை வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.